'புதிய' இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத ஆணையங்கள்: ராகுல்

ரிசர்வ் வங்கி விதிகளை மத்திய அரசு மீறியதாக வெளியான தகவல் தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார். 
'புதிய' இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத ஆணையங்கள்: ராகுல்

தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி விதிகளை மத்திய அரசு மீறியதாக வெளியான தகவல் தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார். அதில், 'புதிய' இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத ஆணையங்கள் தான் தேர்தல் பத்திரங்கள் என்று அழைக்கப்படுவதாக சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

"பாஜக பெட்டகத்தில் கறுப்புப் பணம்" நுழைய தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி விதிகளை மத்திய அரசு மீறியுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் திங்கள்கிழமை குற்றம்சாட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இதுதொடர்பாக ராகுல் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, 'புதிய' இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத ஆணையங்கள் தான் தேர்தல் பத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன, என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேராவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com