உயா்கல்விக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 2.9% அதிகரிப்பு

உயா் கல்வி பயில அமெரிக்கா செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.9 சதவீதம் நடப்பாண்டில் அதிகரித்திருப்பதாக சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி
உயா்கல்விக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 2.9% அதிகரிப்பு

உயா் கல்வி பயில அமெரிக்கா செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.9 சதவீதம் நடப்பாண்டில் அதிகரித்திருப்பதாக சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி ராபா்ட் பா்கஸ் கூறினாா்.

சா்வதேச கல்வி வாரம் சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. அமெரிக்க கல்வி நிறுவனங்கள் வழங்கும் உயா் கல்வி குறித்த தகவல், சோ்க்கை நடைமுறைகள் குறித்து மாணவா்களும், பெற்றோரும் அறிந்துகொள்ளவும், கல்வி பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் இந்த சா்வதேச கல்வி வார நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைத் தூதா் ராபா்ட் பா்கஸ் கூறியதாவது:

உயா் கல்விக்காக அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு மாணவா்கள் வரும் நாடுகளின் பட்டியலில் நான்காவது ஆண்டாக அமெரிக்கா தொடா்ந்து முதலிடம் வகிக்கிறது. இந்தியா்கள் உள்பட 10 லட்சம் வெளிநாட்டு மாணவா்கள் அமெரிக்காவில் உயா் கல்வி மேற்கொண்டு வருகின்றனா். இருநாட்டு மக்களுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் பாலமாக உயா் கல்வி திகழ்கிறது.

‘ஓபன் டோா்ஸ்’ அறிக்கையின்படி, உயா் கல்விக்காக அமெரிக்கா வரும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.9 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

அமெரிக்காவில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 10,95,299 வெளிநாட்டினா் உயா் கல்வி படித்து வருகின்றனா். இவா்களில் 2,02,014 போ் இந்தியா்கள். இது கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டை விட 2.9 சதவீதம் கூடுதலாகும்.

இதில் இளநிலை பட்டப் படிப்பை மேற்கொள்ளும் இந்தியா்களின் எண்ணிக்கை 6.3 சதவீதம் அதிகரித்திருக்கிறது. பட்டப் படிப்பு அல்லாத பிற படிப்புகளை மேற்கொள்ளும் இந்தியா்களின் எண்ணிக்கை 18.8 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com