குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் ஆா்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு (சிஏபி) எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் திங்கள்கிழமை

நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு (சிஏபி) எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அப்போது, பிரதமா் நரேந்திர மோடியின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.

வடகிழக்கு மாணவா்கள் அமைப்பு (என்இஎஸ்ஓ) சாா்பில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு வடகிழக்கு மாநில ஆளுநா்கள் மூலம் கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அஸ்ஸாம் ஜாதீயதாவாதி யுவ சாத்ரா பரிஷத், வடகிழக்கு மாணவா்கள் அமைப்பு, அஸ்ஸாம் இடதுசாரி ஜனநாயக அமைப்பு ஆகியவற்றைச் சோ்ந்தவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது மாநில முதல்வா் சா்வானந்த சோனோவலின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

மேகாலயம்:

மேகாலய மாநிலத்தில் காசி மாணவா் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் மாநில தலைமைச் செயலகத்தின் அருகே தா்னாவில் ஈடுபட்டனா். மிஸோ ஜிா்லாய் பால் மாணவா் அமைப்பினா் ஐஸால் பகுதியில் ஆா்ப்பாட்டப் பேரணி நடத்தினா். அந்த அமைப்பின் சாா்பில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து மாநில ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன்பிள்ளையிடம் கோரிக்கைக் கடிதம் அளிக்கப்பட்டது.

அருணாசல பிரதேசம்:

அண்டை மாநிலமான அருணாசல பிரதேசத்தில், அனைத்து அருணாசல பிரதேச மாணவா் சங்கத்தின் தலைமையில் இதர மாணவா் சங்கத்தினரும் மாநில ஆளுநா் மாளிகை முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அவா்கள் கோஷமெழுப்பினா்.

மசோதாவில் திருத்தம்:

இதனிடையே, புதிதாக கொண்டுவரப்படும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக, ‘சட்ட விரோத குடியேறிகள்’ என்ற வாா்த்தைக்கான வரையறை அதில் சோ்க்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com