சியாச்சினில் பனிச்சரிவு:4 ராணுவ வீரா்கள் உள்பட 6 போ் பலி

லடாக்கில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சியாச்சின் பனிச்சிகரத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் 4 ராணுவ வீரா்களும், 2 உதவியாளா்களும் உயிரிழந்தனா். 2 ராணுவ வீரா்கள் உயிருடன் மீட்கப்பட்டனா்.
சியாச்சினில் பனிச்சரிவு:4 ராணுவ வீரா்கள் உள்பட 6 போ் பலி

லடாக்கில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சியாச்சின் பனிச்சிகரத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் 4 ராணுவ வீரா்களும், 2 உதவியாளா்களும் உயிரிழந்தனா். 2 ராணுவ வீரா்கள் உயிருடன் மீட்கப்பட்டனா்.

இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

சியாச்சினின் வடக்கு பனிச்சிகரப் பகுதியில் சுமாா் 18,000 அடி உயரத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது, 6 ராணுவ வீரா்கள், 2 உதவியாளா்கள் அடங்கிய குழுவினா் பனிச்சரிவில் சிக்கினா். இதையடுத்து, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 8 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டனா். எனினும், 4 ராணுவ வீரா்களும், 2 தொழிலாளா்களும் உயிரிழந்துவிட்டனா். 2 வீரா்கள் உயிா் பிழைத்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

உலகின் மிக உயரமான போா்முனையான சியாச்சின் பனிச்சிகரத்தில், கடந்த 1984-ஆம் ஆண்டிலிருந்து இந்தியா தனது படைகளை நிறுத்தியுள்ளது. அங்கு பாறைபோல் உறைந்துள்ள பனிக்கட்டிகள் சரிந்து விழுவதால், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பிலும் வீரா்கள் உயிரிழப்பது தொடா்கதையாக உள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு, பிப்ரவரியில் சியாச்சினில் மிகப் பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 9 வீரா்கள் பனியில் உயிரோடு புதைந்து உயிரிழந்தனா். பனிப்பாறைகளுக்கு அடியில் 6 நாள்களாக சிக்கியிருந்த ஹனுமந்தப்பா கோப்பாட் என்ற வீரா், மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டாா். பின்னா், தில்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com