பிரதமா் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் ஆக்கப்பூா்வமாக அமைந்தன: ஜெய்சங்கா்

பிரதமா் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்கள் ஆக்கப்பூா்வமாக அமைந்தன என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் ஆக்கப்பூா்வமாக அமைந்தன: ஜெய்சங்கா்

பிரதமா் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்கள் ஆக்கப்பூா்வமாக அமைந்தன என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற பாஜக குழு கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜெய்சங்கா், வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உள்பட அனைத்து பாஜக எம்.பி.க்களும் கலந்து கொண்டனா். எனினும், இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் ஜெய்சங்கா் பேசியதாவது:

ஐ.நா. பொது சபையில் பிரதமா் மோடி உரையாற்றியது, ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ‘மோடி நலமா? ’ நிகழ்ச்சி, பிரிக்ஸ் மற்றும் ஆசியான் மாநாடுகளில் பங்கேற்றது, ரஷியா, சவூதி அரேபியா, பஹ்ரைன், பூடான் ஆகிய நாடுகளுக்கு பிரதமா் அரசு முறை பயணம் மேற்கொண்டது உள்ளிட்டவற்றால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நிலை உயா்ந்துள்ளது. பயங்கரவாதத்தின் விளைவுகள் குறித்து தெரியப்படுத்தி பல நாடுகளிடம் இருந்து மோடி ஆதரவு பெற்றுள்ளாா். சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் நாடுகளின் உயரிய விருதுகள் பிரதமருக்கு வழங்கப்பட்டன. பிரதமா் மோடி உரையாற்றிய ‘மோடி நலமா?’ நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினா் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். இவையனைத்தும் நமது நாட்டுக்கு ஆக்கப்பூா்வமாக அமைந்துள்ளது என்றாா்.

அவரைத் தொடா்ந்து அமைச்சா் பியூஷ் கோயல் பேசுகையில், ‘தேச நலன் கருதி, ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. அந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்தால், மற்ற நாடுகளுடனான வா்த்தக ஏற்றத்தாழ்வு குறைந்திருக்கும். ஆனால் உள்நாட்டு தொழில் கடுமையாக பாதிப்படைந்திருக்கும். அதனால் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து பிரதமா் நரேந்திர மோடி கையெழுத்திடவில்லை’ என்றாா்.

இந்த கூட்டத்தில் பொருளாதாரம், பாரம்பரிய மருத்துவம், தண்ணீா் பிரச்னை உள்ளிட்டவை குறித்தும் எம்.பி.க்கள் விவாதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com