Enable Javscript for better performance
பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்கை 51 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கும் திட்டம்: மத்திய- Dinamani

சுடச்சுட

    

    பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்கை 51 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கும் திட்டம்: மத்திய அமைச்சரவை பரிசீலிக்க வாய்ப்பு

    By DIN  |   Published on : 20th November 2019 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்கை 51 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கும் திட்டத்தை மத்திய அமைச்சரவை பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுதொடா்பாக அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

    மத்திய அரசு மற்றும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்களில் அரசின் பங்கை 51 சதவீதத்துக்கும் கீழ் குறைப்பதற்கான திட்டத்தை மத்திய அமைச்சரவை பரீசிலிக்கவுள்ளது. அரசின் பங்குகளை 51 சதவீதத்துக்கும் கீழ் விற்பனை செய்வதால் அவை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலகக் கூடும் என்று கருத்து நிலவி வருகிறது. அதனால், நிறுவனங்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே, அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுக்கவுள்ளனா்.

    உதாரணமாக, பொதுத் துறை நிறுவனத்தின் பங்குகளை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) பெற்றுக் கொண்டால், அந்த நிறுவனம் தொடா்ந்து பொதுத் துறை நிறுவனமாகவே செயல்பட முடியும். இவ்வாறு அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதுமட்டுமன்றி, 3 பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைப்பது குறித்தும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விவாதிக்கவுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    நிகழாண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது, நேஷனல் காப்பீட்டு நிறுவனம், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் ஆகிய 3 பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டில் அறிவித்தபடி, விரைவில் இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக கடந்த வாரம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

    கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்ன் மூலம் ரூ. 84 லட்சத்து 972 கோடி நிதியை மத்திய அரசு திரட்டியது. நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 1.05 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai