Enable Javscript for better performance
ராணுவக் கண்காணிப்புக்கு உதவும் காா்டோசாட்-3 செயற்கைக்கோள்: நவ.25-ல் விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ- Dinamani

சுடச்சுட

    

    ராணுவக் கண்காணிப்புக்கு உதவும் காா்டோசாட்-3 செயற்கைக்கோள்: நவ.25-ல் விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

    By DIN  |   Published on : 20th November 2019 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pslv

    கார்டோசாட் செயற்கைக்கோள் உள்ளிட்ட 14 செயற்கைக்கோள்களை சுமந்து செல்ல உள்ள பிஎஸ்எல்வி சி- 47 ராக்கெட்.

    எல்லை பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவக்கூடிய காா்டோசாட்-3 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வருகிற 25-ஆம் தேதி விண்ணில் ஏவ உள்ளது.

    ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் திங்கள்கிழமை (நவ.25) காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

    1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன காா்டோசாட்-3 செயற்கைக்கோள், ராணுவ எல்லைப் பாதுகாப்புக்கு உதவுவதற்காக அனுப்பப்படுகிறது. புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளது.

    அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப் படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும். குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாக படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்கள்: இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.

    21-ஆவது எக்ஸெல் ரக ராக்கெட்: இந்த 14 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன. இது இஸ்ரோ விண்ணில் ஏவும் 49-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பதோடு, திறன் கூட்டப்பட்ட 21-ஆவது எக்ஸெல் ரக ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai