இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலையா? அதுவும்..

இந்தியாவில் நடக்கும் கொலை மற்றும் தற்கொலை குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.
இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலை
இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலை

இந்தியாவில் நடக்கும் கொலை மற்றும் தற்கொலை குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.

அந்த புள்ளி விவரத்தில் தற்கொலை குறித்து சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் நிச்சயம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அதாவது, 2016ம் ஆண்டு பதிவான தற்கொலை வழக்குகளின் அடிப்படையில், இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.

அதாவது 2016ல் மட்டும் 1,31,008 பேர் தங்களது இன்னுயிரை தாங்களே மாய்த்துக் கொண்டுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 2% குறைவு என்பதுதான் இன்னும் சோகம். அதாவது 2015ல் 1,33,623 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில், பெண்களை விட ஆண்களே அதிகளவில் (68%) தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற பேரதிர்ச்சியும் காத்திருக்கிறது.

ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 2010ம் ஆண்டு வரை தற்கொலை என்பது மிக உச்சபட்சத்தில் இருந்ததாகவும், அதன்பிறகு அது குறைந்து வந்த நிலையில், 2015ம் ஆண்டு மிக அதிக அளவில் உயர்ந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 2016ம் ஆண்டு சராசரியாக ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒரு இந்தியர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், ஒரு மணி நேரத்தில் 15 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com