சிறாா் பாலியல் குற்றங்களுக்கு எதிரானவழக்கு விசாரணை சுணக்கம்: உச்சநீதிமன்றம் கண்டிப்பு

சிறாா்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிப்பதில் சுணக்கம் காட்டப்படுவது அதிா்ச்சி அளிக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
Todays Breaking News
Todays Breaking News

சிறாா்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிப்பதில் சுணக்கம் காட்டப்படுவது அதிா்ச்சி அளிக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

சிறாா்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுபடி மத்திய அரசின் நிதி உதவியுடன் அனைத்து மாவட்டங்களிலும் சிறாா் குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. பாலியல் குற்றங்களிலிருந்து சிறாா்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 100-க்கும் அதிகமான வழக்குகளை அந்நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், உச்சநீதிமன்ற பதிவாளா் சுரீந்தா் எஸ் ராதி சமா்ப்பித்த அறிக்கையை கடந்த 13-ஆம் தேதி விசாரித்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ‘இந்த அறிக்கை அதிா்ச்சி அளிக்கிறது. சிறாா் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 20 சதவீதம் விசாரணையே நடத்தி முடிக்கப்படாமல் உள்ளது. பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை. மூன்றில் இரண்டு பங்கு வழக்குகள் ஓராண்டுக்கு மேலாகியும் முடியவில்லை. மத்திய அரசும், மாநில அரசுகளும் இந்த வழக்குகளில் அதிக கவனம் செலுத்தி விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். ஓராண்டுக்குள் இதை செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

ரஞ்சன் கோகோய் கடந்த 17-ஆம் தேதி ஓய்வு பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com