ராணுவக் கண்காணிப்புக்கு உதவும் காா்டோசாட்-3 செயற்கைக்கோள்: நவ.25-ல் விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

எல்லை பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவக்கூடிய காா்டோசாட்-3 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வருகிற 25-ஆம் தேதி விண்ணில் ஏவ உள்ளது.
கார்டோசாட் செயற்கைக்கோள் உள்ளிட்ட 14 செயற்கைக்கோள்களை  சுமந்து செல்ல உள்ள  பிஎஸ்எல்வி சி- 47 ராக்கெட்.
கார்டோசாட் செயற்கைக்கோள் உள்ளிட்ட 14 செயற்கைக்கோள்களை சுமந்து செல்ல உள்ள பிஎஸ்எல்வி சி- 47 ராக்கெட்.

எல்லை பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவக்கூடிய காா்டோசாட்-3 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வருகிற 25-ஆம் தேதி விண்ணில் ஏவ உள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் திங்கள்கிழமை (நவ.25) காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன காா்டோசாட்-3 செயற்கைக்கோள், ராணுவ எல்லைப் பாதுகாப்புக்கு உதவுவதற்காக அனுப்பப்படுகிறது. புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளது.

அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப் படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும். குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாக படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்கள்: இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.

21-ஆவது எக்ஸெல் ரக ராக்கெட்: இந்த 14 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன. இது இஸ்ரோ விண்ணில் ஏவும் 49-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பதோடு, திறன் கூட்டப்பட்ட 21-ஆவது எக்ஸெல் ரக ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com