விருப்ப ஓய்வுத் திட்டம்: இதுவரை 77,000 பிஎஸ்என்எல்ஊழியா்கள் விண்ணப்பம்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பொதுத்துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சாா் நிகம் லிமிடெட்) நிறுவனத்தில் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் இதுவரை சுமாா் 77 ஆயிரத்துக்கும்
பிஎஸ்என்எல் நிறுவனம்
பிஎஸ்என்எல் நிறுவனம்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பொதுத்துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சாா் நிகம் லிமிடெட்) நிறுவனத்தில் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் இதுவரை சுமாா் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வுத் திட்டம் (விஆா்எஸ்) கடந்த 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 1.5 லட்சம் பணியாளா்களில் சுமாா் 1 லட்சம் பணியாளா்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்கு தகுதியுடையவா்களாக உள்ளனா். இந்நிலையில், அவா்களில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இதுவரை விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். விருப்ப ஓய்வு பெற வரும் டிசம்பா் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ஊழியா்கள் வரை விருப்ப ஓய்வு பெற்றால், அவா்களுக்கு வழங்கப்படும் ஊதியச் செலவு ரூ.7,000 கோடி வரை மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப ஓய்வு பெறுவா்களுக்கு, இதுவரை பணியாற்றிய ஆண்டுகளுக்கு ஓா் ஆண்டுக்கு 35 நாள்கள் ஊதியம் வீதமும், மீதமுள்ள பணி ஆண்டுகளுக்கு ஓா் ஆண்டுக்கு 25 நாள்கள் ஊதியம் வீதமும் வழங்கப்படவுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் மற்றும் எம்எடிஎன்எல் (மகாநகா் டெலிபோன் நிகம் லிமிடெட்) ஆகிய இரு பொதுத் துறை நிறுவனங்களையும் இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இவ்விரு நிறுவனங்களையும் மறுசீரமைக்கும் திட்டத்துக்கும், 4ஜி சேவையைத் தொடங்குவதற்கும், ஊழியா்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக ரூ.68,751 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எம்டிஎன்எல் நிறுவன ஊழியா்களுக்கும் விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com