காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்த ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்


ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் மனுதாரரின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் மிஸ்டர் மேத்தா நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். நீங்கள் தாக்கல் செய்யும் விளக்க-பிரமாணப் பத்திரம், எந்த முடிவையும் எட்ட உதவாது. எனவே, இந்த வழக்கில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது போன்ற எண்ணத்தை உருவாக்கிவிட வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

முன்னதாக, மனுதாரர், காஷ்மீரில் கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்கும் பல விஷயங்கள் தவறானவை என்று மேத்தா கூறினார்.

மேலும் நீதிபதிகள் கூறியதாவது, நாங்கள் எந்த தடைக்காவல் குறித்தும் பேசவில்லை, தற்போது அனுராதா பாசின், குலாம் நபி ஆசாத் ஆகியோர் காஷ்மீரில் மக்கள் சுதந்திரமாக நடமாடவும், ஊடகங்களுக்கு இருக்கும் தடை குறித்து தொடர்ந்த மனுக்களை மட்டுமே விசாரிக்கிறோம் என்றும் குறிப்பிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com