முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது: மக்களவையில் ஓங்கி ஒலித்த மத்திய அமைச்சரின் குரல்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக மக்களவையில் கேரள எம்பியின் கேள்விக்கு பதிலளித்த ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
mullai_periyar_dam
mullai_periyar_dam


புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக மக்களவையில் கேரள எம்பியின் கேள்விக்கு பதிலளித்த ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கேரள மாநிலம் இடுக்கி காங்கிரஸ் எம்.பி.யான டீன் குரியகோஸ் எழுப்பிய கேள்வியாவது, முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அணையில் உடைப்பு ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும், கேரள மக்களுக்கு பேரிடராக அமையும் என்பதால், இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு விளக்கம் அளித்த மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முல்லைப் பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாகவே உள்ளது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்பும், பின்பும் அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் பாதுகாப்புத் தன்மை உறுதி செய்யப்படுகிறது.

அதன்படி, கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அணையில் மேற்கொண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுதான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பதில் அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com