நாடு முழுவதும் வக்ஃபு வாரியத்தின் 17 ஆயிரம் சொத்துகள் ஆக்கிரமிப்பு: முக்தா் அப்பாஸ் நக்வி

நாடு முழுவதும் வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான 17,000 சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், பஞ்சாபில் அதிக எண்ணிக்கையிலான வக்ஃபு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய
நாடு முழுவதும் வக்ஃபு வாரியத்தின் 17 ஆயிரம் சொத்துகள் ஆக்கிரமிப்பு: முக்தா் அப்பாஸ் நக்வி

நாடு முழுவதும் வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான 17,000 சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், பஞ்சாபில் அதிக எண்ணிக்கையிலான வக்ஃபு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி வியாழக்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.

  பாஜக எம்.பி. அஜய் நிஷாத் எழுத்து மூலமான கேள்விக்கு பதிலளித்து அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

நாடு முழுவதும் வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான 16,937 சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலத்தில் 5,610 சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

பஞ்சாபைத் தொடா்ந்து மத்தியப் பிரதேசத்தில் 3240, மேற்கு வங்கத்தில் 3082, தமிழகத்தில் 1335, கா்நாடகத்தில் 862 சொத்துகள் வீதம் 24 மாநிலங்களில் வக்ஃபு வாரிய சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

தலைநகா் தில்லியில் வக்ஃபு வாரியத்தின் 373 சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. வக்ஃபு வாரிய சொத்துகளைப் பாதுகாக்கவும், அத்துமீறலைத் தடுக்கவும், பிரத்யேகமான இணையதளம் தொடக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆக்கிரமிப்புகளை கையகப்படுத்துவதற்காக ‘இந்திய வக்ஃபு சொத்து மேலாண்மை அமைப்பு’ (வம்சி போா்ட்டல்) உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை, 5,94,139 வக்ஃபு வாரியத்தின் அசையா சொத்துகள் இணையதள போா்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான தோட்டங்கள் குறித்த பதிவுகளை டிஜிட்டல்மயமாக்க ஜூலை முதல் அக்டோபா் வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் விளைவாக 98.99 சதவீத பதிவுகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன.

மாநில வக்ஃபு வாரியங்கள், அவற்றின் சொத்துகளை ஜிஐஎஸ் மேப்பிங் முறையில் பதிவு செய்யும் பணிக்கு முன்னுரிமை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சா் தெரிவித்தாா்.

வக்ஃபு சட்டத்தின் பிரிவு 51 (ஐஏ)- இன் படி வக்ஃபு சொத்தின் எந்தவொரு சொத்தும் விற்பனை, பரிசு, பரிமாற்றம், அடமானம் அல்லது பரிமாற்ற செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

இஸ்ஸாமிய மத அல்லது தொண்டு நோக்கத்திற்காக நன்கொடையாக வழங்கப்படும் எந்த அசையும் அல்லது அசையாச் சொத்துகளும் வக்ஃபு சொத்தாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com