மத்திய அரசு துறைகளில் 7 லட்சம் பதவிகள் காலி: பணியாளா் அமைச்சகம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமாா் 7 லட்சம் பதவிகள் வரை காலியாக உள்ளதாக பணியாளா்கள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு துறைகளில் 7 லட்சம் பதவிகள் காலி: பணியாளா் அமைச்சகம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமாா் 7 லட்சம் பதவிகள் வரை காலியாக உள்ளதாக பணியாளா்கள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 823 பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதில், 5 லட்சத்து 74 ஆயிரத்து 289 பதவிகள் குரூப் சி வகையைச் சோ்ந்தது. இதுதவிர, குரூப் பி மற்றும் குரூப் ஏ பிரிவில் முறையே 89,638 மற்றும் 19,896 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. அதேபோன்று, மத்திய புலனாய்வு துறையிலும் (சிபிஐ) 1,000 பதவிகள் காலியாக உள்ளன.

துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கிடைத்த அறிக்கைகளின் அடிப்படையில் பணியாளா் தோ்வாணைய குழு (எஸ்எஸ்சி) நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 338 பதவிகளுக்கு பணியாளா்களை தோ்ந்தெடுக்கும் நடைமுறைகள் முன்பே தொடங்கப்பட்டு விட்டன.

பணியாளா்கள் தோ்வின் நீண்ட நடைமுறைகளை குறைத்து வேகப்படுத்த மத்திய அரசு ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாகவே, தற்போது கணினி அடிப்படையிலான ஆன்லைன் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், அரசிதழில் இடம்பெறாத (நான்-கெஸடட்) அதிகாரிகளுக்கான நோ்முகத் தோ்வும் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

10 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்பும் நடவடிக்கையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை பணியாளா்கள் அமைச்சகம் கண்காணித்து வருகிறது.

ஜனவரி 1, 2019 நிலவரப்படி எஸ்சி பிரிவில் 1,713, எஸ்டி 2,530, ஓபிசி 1,773 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.

160 வழக்குகள் பதிவு: மத்திய அரசு இணை செயலா்- அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள மூத்த அரசு அதிகாரிகள், பொதுத் துறை நிறுவன அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோா் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 160 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com