மகாராஷ்டிராவில் சிவசேனை கூட்டணி ஆட்சி அமைந்தாலும் 6 மாதத்திற்கு மேல் நீடிக்காது: நிதின் கட்கரி!

மகாராஷ்டிராவில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து ஆட்சியமைத்தாலும் அது நீடிக்காது என்று மத்திய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 
மகாராஷ்டிராவில் சிவசேனை கூட்டணி ஆட்சி அமைந்தாலும் 6 மாதத்திற்கு மேல் நீடிக்காது: நிதின் கட்கரி!

மகாராஷ்டிராவில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து ஆட்சியமைத்தாலும் அது 6 மாதத்திற்கு மேல் நீடிக்காது என்று மத்திய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ்(என்சிபி)-காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதை அடுத்து சிவசேனை தலைமையில் மூன்று கட்சிகளும் சனிக்கிழமை அன்று மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறுகின்றன. ஐந்து ஆண்டுகள் சிவசேனைக்கு முதல்வர் பதவியை வழங்க காங்கிரஸ் மற்றும் என்சிபி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சிவசேனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனை ஆட்சி அமைத்தாலும் அது 6 முதல் 8 மாதம் வரை மட்டுமே நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மூன்று கட்சிகளும் வெவ்வேறு கொள்கைகளை கடைபிடிப்பதால் கூட்டணி ஆட்சி நீடிக்காது என்று கூறினார். 

மேலும் அவர், 'இந்த கூட்டணிக்கு சந்தர்ப்பவாதம் மட்டுமே அடிப்படை. பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே இந்த மூன்று கட்சிகளும் கூட்டணி என்ற பெயரில் இணைகின்றன. இந்த கூட்டணி அரசு அமையுமா என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது. அப்படியே ஒருவேளை அமைந்தாலும், 6 முதல் 8 மாதத்திற்கு மேல் நீடிக்காது. கிரிக்கெட்டிலும் சரி, அரசியலிலும் சரி எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஹிந்துத்துவா அடிப்படையிலே பாஜக, சிவசேனையுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், எங்களால் முடிந்தவரை  முயன்றோம். கூட்டணியின் உடன்பாடு ஏற்படவில்லை' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com