Enable Javscript for better performance
மகாராஷ்டிர எம்எல்ஏ-க்களை மாநிலம் கடத்த காங்கிரஸ் திட்டம்?- Dinamani

சுடச்சுட

    

    மகாராஷ்டிர எம்எல்ஏ-க்களை மாநிலம் கடத்த காங்கிரஸ் திட்டம்?

    By DIN  |   Published on : 23rd November 2019 05:52 PM  |   அ+அ அ-   |    |  

    Congress

     

    மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பமாக அம்மாநில முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ், சனிக்கிழமை மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். இதில் அதிரடித் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல்வராக பதவியேற்றார். இச்சம்பவம் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பாஜக-வுக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதை அக்கட்சியின் தலைவர் சரத் பவார் மறுத்துள்ளார். மேலும் அனைத்து எம்எல்ஏ-க்களும் தங்களுடன் இருப்பதாக தெரிவித்தார். இதனிடையே தனது குடும்பமும், கட்சியும் பிளவுபட்டுவிட்டதாக சரத் பவார் மகள் சுப்ரியா சுலே தெரிவித்திருப்பது அதை உறுதிபடுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அனைவரையும் அம்மாநிலத்தில் இருந்து வெளியேற்ற காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அனைவரையும் காங்கிரஸ் ஆளும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தங்கவைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் மற்றும் எம்எல்ஏ-க்கள் சிலர் ஒரே இரவில் தங்களது நிலையை மாற்றிக்கொண்டதும், பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சிலர் பாஜக-வுக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதாலும் காங்கிரஸ் கட்சி இம்முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai