வர்த்தகத் தலைநகரை கட்டுப்படுத்த சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் சதித்திட்டம்: ரவிசங்கர் பிரசாத்

நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையை பின்வாசல் வழியாக நுழைந்து கட்டுப்படுத்த சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து சதித்திட்டம் தீட்டியதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெ
வர்த்தகத் தலைநகரை கட்டுப்படுத்த சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் சதித்திட்டம்: ரவிசங்கர் பிரசாத்

நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையை பின்வாசல் வழியாக நுழைந்து கட்டுப்படுத்த சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து சதித்திட்டம் தீட்டியதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். 

இதுதொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது,

மகாராஷ்டிரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அம்மாநிலத்தின் முதல்வராக பாஜக-வைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ் தான் மீண்டும் பதவியேற்பார் என்று முன்னிலைப்படுத்தி தான் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

பாஜக, சிவசேனை கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற தேவேந்திர ஃபட்னவீஸை முன்னிலைப்படுத்தியது தான் முக்கியக் காரணம். சிவசேனை கட்சிக்கு அதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைக்கவும் இந்த பிரசார முறை தான் உதவியது. 

மகாராஷ்டிரம் நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று. அதிலும் குறிப்பாக நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பை மாநகரம் அமைந்துள்ள மாநிலமாகும். எனவே, மும்பையை கைப்பற்றி, கட்டுப்படுத்தும் முனைப்பில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பின்வாசல் வழியாக நுழைய சதித்திட்டம் தீட்டியது என்று குற்றம்சாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com