பழைய பேப்பருடன் 15 சவரன் நகையையும் எடைக்குப் போட்ட பெண்: அப்புறம் என்ன ஒரே பாராட்டுதான்!

எப்போதும் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எடைக்குப் போடும் போது சிலரது மனதில் ஒரு விஷயம் ஓடும். அது, இந்த பழைய குப்பையில் தேவையான ஏதேனும் ஒரு பொருள் இருந்தால்?
பழைய பேப்பருடன் 15 சவரன் நகையையும் எடைக்குப் போட்ட பெண்: அப்புறம் என்ன ஒரே பாராட்டுதான்!


நாமக்கல்: எப்போதும் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எடைக்குப் போடும் போது சிலரது மனதில் ஒரு விஷயம் ஓடும். அது, இந்த பழைய குப்பையில் தேவையான ஏதேனும் ஒரு பொருள் இருந்தால்?

இந்த அச்சம் ஒவ்வொரு முறையும் பேப்பர் போன்றவற்றை எடைக்குப் போடும் போதும் எழும் அச்சமாக இருக்கலாம். வாருங்கள் இதனை உண்மையாக்கியுள்ளார் நாமக்கல் பெண்மணி ஒருவர்.

ராசிபுரம் விக்னேஷ் நகரைச் சேர்ந்தவர் கலாதேவி (45). வீட்டில் இருந்த பழைய பேப்பர்களை, பழைய பொருட்களை வாங்கும் வியாபாரியிடம்  போட்டுள்ளார். அவர் சென்ற பிறகுதான், பழைய பேப்பர்களுக்கு இடையில் 15 சவரன் நகையை தான் வைத்திருந்தது கலாவதிக்கு நினைவுக்கு வந்தது.

தெருத் தெருவாகத் தேடியும் அவரை கலாவதியால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக கலாவதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்து, அவரைத் தேடும் பணி நடைபெற்றது.

காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரித்த போது, அவரது பெயர் செல்வராஜ் (55) என்பதும் சேலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், தான் எடுத்து வந்த பேப்பரில் தங்க நகைகள் இருப்பதைப் பார்த்ததும் மறுநாளே கலாவதியிடம் கொண்டு சென்று நகைகளைக் கொடுத்து விட்டதாகவும், அவரும் தனது நேர்மையைப் பாராட்டி தனக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொடுத்ததாகவும் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com