கட்சியும் குடும்பமும் உடைந்துவிட்டது: சரத் பவார் மகள் வருத்தம் 

கட்சியும் குடும்பமும் உடைந்துவிட்டது என சரத் பவார் மகள் சுப்ரியா சுலே வருத்தம் தெரிவித்துள்ளார். 
கட்சியும் குடும்பமும் உடைந்துவிட்டது: சரத் பவார் மகள் வருத்தம் 

கட்சியும் குடும்பமும் உடைந்துவிட்டது என சரத் பவார் மகள் சுப்ரியா சுலே வருத்தம் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில், ஆட்சியைமக்கத் தேவையான எண்ணிக்கையை பாஜக- சிவசேனை கூட்டணி பெற்றிருந்தபோதிலும், ஆட்சியில் சம பங்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பாஜகவிடம் சிவசேனை நிபந்தனை விதித்தது. அதற்கு பாஜக சம்மதிக்காததால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனை வெளியேறியது.

அங்கு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, கடந்த 12-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, சிவசேனையும், எதிரணியைச் சோ்ந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கு ஒப்புக் கொண்டன.

குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வகுப்பது தொடா்பாக, என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவா்கள், தில்லியில் சரத் பவார் இல்லத்தில் கடந்த இரு தினங்களாக கூடி ஆலோசனை நடத்தினா். முடிவில், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே நேற்று கருத்தொற்றுமை ஏற்பட்டது. இதையடுத்து சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாராஷ்டிரத்தில் விரைவில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பாஜக அங்கு ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் இன்று பதவி ஏற்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவாரின் இந்த முடிவுக்கு, சிவசேனை, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

அஜித் பவாரின் முடிவு கட்சியின் முடிவல்ல என்றும் அது அவரின் தனிப்பட்ட முடிவு என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்தார். இந்நிலையில் கட்சியும் குடும்பமும் உடைந்துவிட்டது என சரத்பவார் மகள் சுப்ரியா சுலே வருத்தம் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் யாரை நம்புவது என தெரியவில்லை எனவும் அவர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com