பெங்களூருவில் ஏரி உடைப்பினால் வெறும் 350 வீடுகளுக்குள்தான் வெள்ளம்: மாநகராட்சி சொல்கிறது

பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு ஏரியின் கரைகளில் ஏற்பட்ட உடைப்பினால், ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 350 வீடுகள் சிக்கியுள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ, யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை.
பெங்களூருவில் ஏரி உடைப்பில் 350 வீடுகளுக்குள் வெள்ளம்
பெங்களூருவில் ஏரி உடைப்பில் 350 வீடுகளுக்குள் வெள்ளம்


பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு ஏரியின் கரைகளில் ஏற்பட்ட உடைப்பினால், ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 350 வீடுகள் சிக்கியுள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ, யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை.

பெங்களூரு மாநகர கூடுதல் ஆணையர்  இது பற்றி கூறுகையில், ஏரிக் கரைகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சுமார் 350 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது என்று  தெரிவித்துள்ளார்.

ஏரிக்கரைகள் உடைப்பு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடந்தது. 145 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த ஹுலிமாவு ஏரியில் 4 முதல் 5 அடிக்கு இருந்த நீர் முழுவதும் அருகில் இருந்த குடியிருப்புகளுக்குள் சூழ்ந்து கொண்டது.

பெங்களூரு ஹுலுமாவில் உள்ள ஏரிக்கரையில் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை வளா்ச்சிப்பணி நடைபெற்று வந்தது. அப்போது திடீரென ஏரி உடைந்து, ஏரிக்கு அருகில் இருந்த  வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. 

இதனால் சாந்திநிகேதன், கிருஷ்ணாநகா், ஹுலிமாவு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். 

தகவலை அடுத்து அங்கு சென்று மாநகராட்சி ஆணையா் அனில்குமாா், துணை மேயா் ராம்மோகன்ராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா். 
இதனையடுத்து வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ள மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உணவு, குடிநீா் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளனா். 

ஏரியில் உடைந்த பகுதியை அடைத்து, வீடுகளில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்திய பிறகு, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com