பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க இது கோவா அல்ல.. மகாராஷ்டிரா..: சரத் பவார் சவால்!

பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க இது கோவா அல்ல என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 162-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களைக் கொண்டு வருவேன் என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க இது கோவா அல்ல.. மகாராஷ்டிரா..: சரத் பவார் சவால்!


பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க இது கோவா அல்ல என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 162-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களைக் கொண்டு வருவேன் என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் தங்களது பெரும்பான்மையைக் காண்பிக்கும் வகையில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஒன்று கூடினர். சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது, காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் பேசுகையில்,

"நாம் வெறும் 162 அல்ல, 162-க்கும் மேல் இருக்கிறோம். நாம் அரசின் ஒரு அங்கமாக இருப்போம். பாஜகவை தடுக்க இந்தக் கூட்டணிக்கு அனுமதியளித்த சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசு அமைக்க ஆளுநர் நம்மை அழைக்க வேண்டும்" என்றார்.

 சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், 

"நமது போராட்டம் என்பது அதிகாரத்துக்கானது மட்டுமல்ல. உண்மையே வெல்லும் என்பதற்காகத்தான் நாம் போராடுகிறோம். நீங்கள் எங்களை எந்த அளவுக்கு உடைக்க முயல்கிறீர்களோ, அந்த அளவுக்கு நாங்கள் ஒன்றிணைவோம்" என்றார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசுகையில், 

"மகாராஷ்டிர மக்கள் நலனுக்காக நாம் இங்கு ஒன்றிணைந்துள்ளோம். பெரும்பான்மையே இல்லாமல் அரசு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடையாது. ஆனால் அங்கு அரசு அமைத்தது. நமது பெரும்பான்மையை நிரூபிக்க எந்தவித பிரச்னையும் இருக்காது. கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நான் 162-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களை கொண்டு வருவேன். இது கோவா அல்ல, மகாராஷ்டிரா" என்றார்.

உறுதிமொழி:

இதையடுத்து, மூன்று கட்சிகளின் எம்எல்ஏ-க்களும் "சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சோனியா காந்தி ஆகியோரது தலைமையில் எனது கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். ஆசை காட்டி என்னை ஏமாற்ற முடியாது. பாஜகவுக்கு சாதகமான செயல் எதையும் செய்ய மாட்டேன்" என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல்,

"இந்த 162 எம்எல்ஏ-க்களும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தற்போதைய மகாராஷ்டிர அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள். அதன்பிறகு, புதிய அரசு அமைக்கப்படும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com