வியாபம் முறைகேடு வழக்கு: 30 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு!

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் முறைகேடு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 31 பேரில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 30 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
வியாபம் முறைகேடு வழக்கு: 30 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு!


மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் முறைகேடு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 31 பேரில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 30 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளித்தது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு மாநில தொழில்கல்வி தேர்வு வாரியம் (ஹிந்தியில் வியாபம்) காவல்துறை காவலர் பணிக்காக தேர்வு நடத்தியது. இதில் ஆள்மாறாட்டம் செய்து சிலர் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதில் அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல்வேறு முக்கியத் தரப்பினருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதன் முடிவில் ஆள்மாறாட்டம் செய்த 12 பேர், இடைத்தரகர்கள் 7 பேர் உள்பட 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்து போபால் சிபிஐ நீதிமன்றம் கடந்த 21-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் இவர்களுக்கான தண்டனை விவரம் 25-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.பி. சாஹு தெரிவித்தார்.

இதன்படி, இன்று வெளியான தண்டனை விவரத்தின்படி பிரதீப் தியாகி (29) எனும் முக்கியக் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 30 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒவ்வொருக்கும் தலா ரூ. 30,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com