உங்கள் கண்ணீரைத் துடைக்க எகிப்தில் இருந்து வருகிறது 6,090 மில்லியன் டன் வெங்காயம்

இந்தியாவில் விலை உயர்ந்து வரும் வெங்காயத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் எகிப்தில் இருந்து 6,090 மில்லியன் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
உங்கள் கண்ணீரைத் துடைக்க எகிப்தில் இருந்து வருகிறது 6,090 மில்லியன் டன் வெங்காயம்


புது தில்லி: இந்தியாவில் விலை உயர்ந்து வரும் வெங்காயத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் எகிப்தில் இருந்து 6,090 மில்லியன் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

எகிப்து நாட்டில் இருந்து 6,090 மில்லியன் டன் வெங்காயம் கப்பல்கள் மூலம் விரைவில் மும்பைக்கு வருகிறது.

இந்த வெங்காயம் மாநில அரசுகளுக்கு கிலோ ரூ.52 - 55க்கு விற்பனை செய்யப்படும். இதனை மாநில அரசுகள் மானிய விலையில் அல்லது சலுகை விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள்தான் வெங்காயத்தை மும்பையில் இருந்து எடுத்துச் செல்ல  வேண்டும். தேவைப்பட்டால்  போக்குவரத்து வசதியை மும்பையின் நஃபெட் நிறுவனம் மேற்கொள்ளும். எகிப்தில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயம் டிசம்பர் முதல் வாரத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட இந்திய மாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டதால், இந்தியாவில் தேவைக்கேற்ற வரத்து இல்லாமல், வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ வெங்காயம் தற்போது சதமடித்திருக்கும் நிலையில், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com