குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் வசூலித்த அபராதம் ரூ.1996 கோடி!

குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகள் வைத்திருந்த வாடிக்கையாளர்களிடம் அபதாரம் விதித்து, அதன்
குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் வசூலித்த அபராதம் ரூ.1996 கோடி!

புதுதில்லி:  குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகள் வைத்திருந்த வாடிக்கையாளர்களிடம் அபதாரம் விதித்து, அதன் மூலம் பொதுத்துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில் ரூ.1996 கோடியை வசூலித்து கூடுதலாக வருவாயாக பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.500, ரூ.1000, ரூ.3000. ரூ.5000 என குறைந்தபட்ச இருப்புத்தொகையை பரமாரிக்க வேண்டும் என்று வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன.

அப்படி குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை வங்கிகள் அனைத்துமே மேற்கொண்டு வருகின்றன.

பாரத ஸ்டேட் வங்கிதான் குறைந்த பட்ச இருப்பு பராமரிக்காவிட்டால் அபராதம் என்ற நடமுறையை என்று கடந்த 2012 ஆம் ஆண்டு வரை பின்பற்றி வந்தது. பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை மீண்டும் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பாரத ஸ்டேட் வங்கி தொடங்கியது. ஆனால் மக்கள் அபராத தொகை அதிகமாக இருப்பதாக குற்றம்சாட்டியதால் அபராதத்தை சற்று குறைத்தது.

இந்நிலையில், மக்களவையில் நேற்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதவர்களுக்கு கடந்த 2016-17 ஆம் ஆண்டில் ரூ.790.22 கோடி அபராதத்தை வங்கிகள் வசூலித்துள்ளன.

பின்னர் 2017-18 ஆம் ஆண்டில் 18 பொதுத்துறை வங்கிகள் அதிகபட்சமாக ரூ.3,368.42 கோடியை வசூலித்து உள்ளன. இதேபோல் 2018-19 ஆம் ஆண்டில், 18 பொதுத்துறை வங்கிகள் ரூ.1996.46 கோடியை அபராதமாக வசூலித்துள்ளன என்று தெரிவித்தார்.

குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையானது ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளிட்ட அடிப்படை சேமிப்பு கணக்குகளுக்கு இல்லை என்றும் அமைச்சர் அனுராக் சிங் தாகூர் விளக்கம் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com