சிவசேனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனை தரப்பில் புதிய மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவசேனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

மகாராஷ்டிர அரசியலில் பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராகவும், என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவாரை துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தன. 

இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீது உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை தேவேந்திர ஃபட்னவீஸ் எந்த விதமான கொள்கை முடிவுகளையும் எடுக்க தடை விதிக்க வேண்டும். எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனை தரப்பில் புதிய மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com