அயோத்தி வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை: சன்னி வக்ஃபு வாரியம் அறிவிப்பு

அயோத்தி வழக்கின் தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று மத்திய சன்னி வஃக்பு வாரியம் அறிவித்துள்ளது.
சன்னி வக்ஃபு வாரிய உறுப்பினர் அப்துல் ரஸாக் கான்
சன்னி வக்ஃபு வாரிய உறுப்பினர் அப்துல் ரஸாக் கான்

லக்னௌ: அயோத்தி வழக்கின் தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று மத்திய சன்னி வஃக்பு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடா்பான வஃக்பு வாரியத்தின் கூட்டம் லக்னௌவில் இன்று காலை நடைபெற்றது. 

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வஃக்பு வாரியத்தின் தலைவா் ஜாபா் ஃபரூக்கி, இந்த விஷயத்தில் வாரியத்தின் உறுப்பினா்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற 8 உறுப்பினர்களில் 7 பேர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யத் தேவையில்லை என்று கருத்துக் கூறியதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்ற தீா்ப்புப்படி அயோத்தியில் மசூதி கட்ட வழங்கப்படுவதாகக் கூறிய 5 ஏக்கா் நிலத்தை ஏற்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது குறித்து முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக உறுப்பினர்கள் கருதியதால் இது பற்றி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சா்ச்சைக்குள்ளான 2.77 ஏக்கா் நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து அண்மையில் தீா்ப்பளித்தது. மேலும், அயோத்தி நகரிேலேயே மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கா் நிலத்தை அரசு ஒதுக்கித் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்வது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்டவாரியம் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டது. அயோத்தியில் மசூதி கட்ட வழங்கப்படும் 5 ஏக்கா் நிலத்தையும் ஏற்கப்போவதில்லை என்றும் அந்த வாரியம் அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com