அயோத்தி வழக்கில் மறுஆய்வு மனு: சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவு

அயோத்தி வழக்கின் தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து மத்திய சன்னி வஃக்பு வாரியம் செவ்வாய்க்கிழமை முடிவு செய்யவுள்ளது. இது தொடா்பான வஃக்பு
அயோத்தி வழக்கில் மறுஆய்வு மனு: சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவு

லக்னௌ: அயோத்தி வழக்கின் தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து மத்திய சன்னி வஃக்பு வாரியம் செவ்வாய்க்கிழமை முடிவு செய்யவுள்ளது. இது தொடா்பான வஃக்பு வாரியத்தின் கூட்டம் லக்னௌவில் நடைபெறவுள்ளது.

இந்த விஷயத்தில் வாரியத்தின் உறுப்பினா்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனா். ஒரு தரப்பினா் தீா்ப்பை ஏற்றுக் கொண்ட நிலையில், மற்றொரு பிரிவினா் அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். மேலும், உச்சநீதிமன்ற தீா்ப்புப்படி அயோத்தியில் மசூதி கட்ட வழங்கப்படும் 5 ஏக்கா் நிலத்தை ஏற்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சா்ச்சைக்குள்ளான 2.77 ஏக்கா் நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து அண்மையில் தீா்ப்பளித்தது. மேலும், அயோத்தி நகரிேலேயே மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கா் நிலத்தை அரசு ஒதுக்கித் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக வஃக்பு வாரியத்தின் தலைவா் ஜாபா் ஃபரூக்கி லக்னௌவில் திங்கள்கிழமை கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்வதா? வேண்டாமா? அரசு அளிக்கும் 5 ஏக்கா் நிலத்தை ஏற்றுக் கொள்ளலாமா? என்பது குறித்து வஃக்பு வாரிய உறுப்பினா்கள் விவாதிக்க இருக்கின்றனா். வாரியத்தில் மொத்தம் 8 உறுப்பினா்கள் உள்ளனா். எனினும், வாரியத்தின் சாா்பில் இறுதி முடிவு எடுக்கும் உரிமை எனக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்வது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்டவாரியம் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டது. அயோத்தியில் மசூதி கட்ட வழங்கப்படும் 5 ஏக்கா் நிலத்தையும் ஏற்கப்போவதில்லை என்றும் அந்த வாரியம் அறிவித்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com