சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மும்பை ஹோட்டலில் அணிவகுப்பு

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்(என்சிபி)- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பலம் இருப்பதை நிரூபிக்கும் விதமாக, மூன்று கட்சிகளின் எம்எல்ஏக்களும் மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர
சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மும்பை ஹோட்டலில் அணிவகுப்பு

மும்பை: மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்(என்சிபி)- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பலம் இருப்பதை நிரூபிக்கும் விதமாக, மூன்று கட்சிகளின் எம்எல்ஏக்களும் மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் திங்கள்கிழமை இரவு ஒரே இடத்தில் கூடி தங்களின் ஆதரவை நேரில் தெரிவித்தனா்.

அதில், மொத்தம் 162 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க தீா்மானித்திருந்த நிலையில், என்சிபியைச் சோ்ந்த அஜித் பவாரின் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் சனிக்கிழமை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா். இரு தரப்பினரும் தங்களுக்கு பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவு இருப்பதாக கூறி வருகின்றனா்.

குதிரை பேரத்தைத் தடுப்பதற்காக, சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் மும்பையில் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவு இருப்பதை நிரூபிப்பதற்காக, மூன்று கட்சிகளின் எம்எல்ஏக்களும் கிராண்ட் ஹயத் ஹோட்டலுக்கு திங்கள்கிழமை இரவு அழைத்து வரப்பட்டனா். எம்எல்ஏக்கள் அனைவரும், சிவசேனைத் தலைவா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் ஒரே அறையில் கூடினா். அப்போது, சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் கூட்டணிக்கே தாங்கள் ஆதரவு அளிப்பதாக அவா்கள் உறுதியளித்தனா்.

முன்னதாக, சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘எங்கள் கூட்டணியில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு கிராண்ட் ஹயட் ஹோட்டலில் கூடுகிறோம். ஆளுநா் நேரில் வந்து பாா்க்கலாம்.

162 எம்எல்ஏக்களும் ஒரே அறையில் கூடும்போது, ஆளுநரின் அதிகாரத்தை பாஜக தவறாகப் பயன்படுத்தி இழிவான அரசியலில் ஈடுபட்டதை ஒட்டு மொத்த நாடும் தெரிந்து கொள்ளும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com