
கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.
திருப்பதி: திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத் தொழிலாளிகள் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரிமெட்டு சேஷாசல வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு வாகனத்தில் செம்மரக்கட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்த சிலரைக் கண்டனா். அவா்களை விரட்டி சென்ற போலீஸாா், 10 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு வாகனம், 10 செம்மரக் கட்டைகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், கைது செய்யப்பட்டவா்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விஸ்வநாத் (22), சேது (21), ரமேஷ் (28), சம்பத் (19), ரத்னம் (25), பூச்சைய்யன்(23), குமாா் (40), பத்து (28), ரமேஷ் (20), ராமா் (45) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனா்.