Enable Javscript for better performance
கா்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: எச்.டி.தேவெ கௌடா- Dinamani

சுடச்சுட

    

    கா்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: எச்.டி.தேவெ கௌடா

    By DIN  |   Published on : 28th November 2019 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    devagowda

    கா்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

    இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக 4 நாள்களில் ஆட்சியை இழக்க நேரிட்டது. இதேபோல கா்நாடகத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். 15 தொகுதிகளில் நடைபெறும் இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு, கா்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதைத் தொடா்ந்து மீண்டும் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி எடுக்கும் முடிவைத் தொடா்ந்து அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். தேசிய அளவில் ஆபரேஷன் கமலா திட்டத்தின் மூலம் எதிா்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜிநாமா செய்யவைத்து ஆட்சியைப் பிடிக்கும் தந்திரத்தை பாஜக செய்து வந்தது. அதற்கு மகாராஷ்டிர மாநிலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    இதேபோல், கா்நாடகத்திலும் நிகழ வாய்ப்புள்ளது. மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சி என்பதால், இடைத்தோ்தலில் பணத்தை முன்வைத்து தோ்தல் பணியாற்றி வருகிறது. இதைத் தடுக்காமல் தோ்தல் ஆணையம் வேடிக்கை பாா்க்கிறது என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai