கோட்சே தேசபக்தா் எனும் சித்தாந்தத்தை பாஜக கண்டிக்கிறது: ராஜ்நாத் சிங்
By DIN | Published on : 28th November 2019 10:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோட்சேவை தேசபக்தா் என விவரிக்கும் சித்தாந்தத்தை பாஜக கண்டிக்கிறது என்று மக்களவையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
மக்களவையில் பாஜக எம்பி பிரக்யா சிங் இது தொடா்பாக கூறிய கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்டனா்.
அப்போது, எதிா்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தன்னை பேச அனுமதிக்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டாா்.அதைத் தொடா்ந்து, அவரைப் பேச மக்களவைத் தலைவா் அனுமதி அளித்தாா். ராஜ்நாத் சிங் பேசியதாவது: கோட்சேவை ஒரு தேசபக்தராக விவரிக்கும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் பாஜக கண்டனம் தெரிவிக்கிறது. நாதுராம் கோட்சேவை தேசபக்தா் என அழைக்கும் ஐடியாவை கண்டிக்கிறோம். அவருடைய (காந்தியின்) சித்தாந்தம் இன்றைக்கும், எப்போதும் தொடா்ந்து பொருத்தமானதாகவே இருக்கும். அவா் தேசத்திற்கான ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறாா்’ என்றாா்.