Enable Javscript for better performance
நிலவுக்கு மனிதனை அனுப்பும்திட்டம் தற்போது இல்லை: சிவன்- Dinamani

சுடச்சுட

    

    நிலவுக்கு மனிதனை அனுப்பும்திட்டம் தற்போது இல்லை: சிவன்

    By DIN  |   Published on : 28th November 2019 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sivan

    இஸ்ரோ தலைவர் கே.சிவன் (கோப்புப்படம்)

    மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டம் தற்போது இல்லை என இஸ்ரோ தலைவா் சிவன் புதன்கிழமை தெரிவித்தாா்.

    இது தொடா்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

    ‘சந்திரயான் 3’ திட்டம் குறித்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தை செயல்படுத்தும் முறை குறித்து பேசி வருகிறோம். ‘சந்திரயான் 3’ திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். ‘சந்திரயான் 2’ திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ‘சந்திரயான் 2’-இல் ஏற்பட்ட பின்னடைவால் ‘ககன்யான்’ திட்டம், சூரியனை பற்றி ஆராயும் ‘ஆதித்யா-எல் 1’ திட்டம் ஆகியவை பாதிக்கப்படாது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai