24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிப்பது கடினம்: ராம்தாஸ் அத்வாலே

24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிப்பது கடினம் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிப்பது கடினம்: ராம்தாஸ் அத்வாலே

24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிப்பது கடினம் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் சனிக்கிழமை காலை பதவியேற்றனர். அதற்கு முன்னதாக, மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவா் ஆட்சியும் ரத்து செய்யப்பட்டது. சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க தீா்மானித்திருந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அஜித் பவார் மேற்கொண்ட முடிவு அந்தக் கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஃபட்னவீஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை கூட்டாக மனு தாக்கல் செய்தன. அந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமா்வு விசாரித்து, சட்டப்பேரவையில் புதன்கிழமை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ததால், மகாராஷ்டிர சட்டப் பேரவையில் புதன்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லாமல் போனது. இதுகுறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் 24 மணிநேர காலக்கெடுவை வழங்கவில்லை என்றால், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் ராஜினாமா செய்திருக்க மாட்டார்கள். 24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிப்பது கடினம் என்றார்". 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com