மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றார் உத்தவ்!

மகாராஷ்டிர மாநிலத்தின் 19-வது முதல்வராக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே இன்று (வியாழக்கிழமை) மாலை பதவியேற்றுக் கொண்டார்.
மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றார் உத்தவ்!


மகாராஷ்டிர மாநிலத்தின் 19-வது முதல்வராக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே இன்று (வியாழக்கிழமை) மாலை பதவியேற்றுக் கொண்டார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கூட்டணியை உறுதி செய்தனர். இந்தக் கூட்டணியின் தலைவராகவும், மாநிலத்தின் முதல்வராகவும் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்றுக்கொண்டார். மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் பகத் சிங் கோஷியாரி உத்தவ் தாக்கரே தவிர 6 அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தப் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு, காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

அமைச்சர்கள் பதவியேற்பு:

சிவசேனை: ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய்

தேசியவாத காங்கிரஸ்: ஜெயந்த் பாட்டீல், சாகன் புஜ்பால்

காங்கிரஸ்: பாலாசாகேப் தோரத், நிதின் ரௌத்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com