இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் சோகமான நாள்: பிரக்யா சிங் கருத்து குறித்து ராகுல் காந்தி

கோட்சே குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்பி பிரக்யா சிங்கை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 
இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் சோகமான நாள்: பிரக்யா சிங் கருத்து குறித்து ராகுல் காந்தி

கோட்சே குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்பி பிரக்யா சிங்கை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவு திருத்த மசோதா மீதான நேற்றைய விவாதத்தில், தான் ஏன் மகாத்மா காந்தியை கொன்றேன் என்பது குறித்த கோட்சேவின் கருத்தை திமுக எம்பி ஆ. ராசா மேற்கோள் காட்டினார். அப்போது குறுக்கிட்ட பிரக்யா தாகூர், "ஒரு தேச பக்தரை நீங்கள் உதாரணமாக அளிக்க முடியாது" என்றார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அமளியிலும் ஈடுபட்டனர். 

இதையடுத்து பிரக்யா சிங்கின் கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லா தெரிவித்தார். இதனிடையே அவை கூடியதும் இவ்விவகாரத்தை இன்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பியது. நாதுராம் கோட்சே குறித்த பிரக்யா சிங்கின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் மத்திய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா தாகூரை நீக்கி பாஜக தலைவர் ஜேபி நட்டா நடவடிக்கை எடுத்துள்ளார். 

இதனிடையே கோட்சே குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்பி பிரக்யா சிங்கை ராகுல் காந்ததி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், தீவிரவாதி பிரக்யா சிங், தீவிரவாதி கோட்சேவை தேசபக்தர் என கூறியுள்ளார். இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் சோகமான நாள். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com