ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தில் முறைகேடு: 1,271 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில், கடந்த 3 ஆண்டுகளில் 1,271 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா்
ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தில் முறைகேடு: 1,271 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில், கடந்த 3 ஆண்டுகளில் 1,271 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பியூஷ் கோயல் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

ஏற்றுமதிக்கு உதவியாக இருக்கும் வகையில் மத்திய அரசு ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. கடந்த 3 ஆண்டுகளில் அரசின் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களை தவறாகப் பயன்படுத்திய 1,271 நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களின் பலன்கள் அந்த நிறுவனங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனங்களின் ‘இறக்குமதி- ஏற்றுமதிக்கான குறியீடு’ ரத்து செய்யப்பட்டது. சில நிறுவனங்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வா்த்தகத்துக்கான இயக்குநரகம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி குறித்த கேள்விக்கு, பியூஷ் கோயல் அளித்த பதிலில், ‘2018-19 ஆம் நிதியாண்டில் மின்னணு பொருள்களின் ஏற்றுமதி ரூ. 61,908 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ. 20 ஆயிரம் கோடி அதிகமாகும். இந்திய செல்லுலாா் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் அளித்த தகவலின்படி, கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவில் செல்லிடப்பேசி மற்றும் அதன் பாகங்கள் தயாரிக்கும் 268 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com