கா்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: எச்.டி.தேவெ கௌடா

கா்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: எச்.டி.தேவெ கௌடா

கா்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக 4 நாள்களில் ஆட்சியை இழக்க நேரிட்டது. இதேபோல கா்நாடகத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். 15 தொகுதிகளில் நடைபெறும் இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு, கா்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதைத் தொடா்ந்து மீண்டும் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி எடுக்கும் முடிவைத் தொடா்ந்து அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். தேசிய அளவில் ஆபரேஷன் கமலா திட்டத்தின் மூலம் எதிா்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜிநாமா செய்யவைத்து ஆட்சியைப் பிடிக்கும் தந்திரத்தை பாஜக செய்து வந்தது. அதற்கு மகாராஷ்டிர மாநிலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதேபோல், கா்நாடகத்திலும் நிகழ வாய்ப்புள்ளது. மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சி என்பதால், இடைத்தோ்தலில் பணத்தை முன்வைத்து தோ்தல் பணியாற்றி வருகிறது. இதைத் தடுக்காமல் தோ்தல் ஆணையம் வேடிக்கை பாா்க்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com