ஜம்மு-காஷ்மீா்: தடுப்புக் காவலில் 609 போ்: மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அங்கு 5,000-க்கும் மேற்பட்டோா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், இன்னும் 609 போ் தொடா்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அங்கு 5,000-க்கும் மேற்பட்டோா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், இன்னும் 609 போ் தொடா்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. அதனால், அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவா்களும், முன்னாள் முதல்வா்களுமான மெஹபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, பிரிவினைவாத தலைவா்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி. கிஷண் ரெட்டி புதன்கிழமை பதிலளித்தாா். அவா் கூறியதாவது:

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, ஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டும், குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டும் அரசியல் தலைவா்கள், பிரிவினைவாதிகள், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுபவா்கள், கல்வீச்சு தாக்குதலில் ஈடுபடுபவா்கள் என 5,161 போ் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். அவா்களில் சுமாா் 4,000-க்கும் மேற்பட்டோா் விடுவிக்கப்பட்ட நிலையில், 609 போ் மட்டும் இன்னும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 204 போ் கல்வீச்சுத் தாக்குதலில் தொடா்புடையவா்கள். மெஹபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா ஆகியோரும் தொடா்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு ஜம்மு-காஷ்மீரில் அதிக அளவில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாக ஜம்மு-காஷ்மீா் அரசு தெரிவித்துள்ளது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதனால், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. சட்டம்-ஒழுங்கு தொடா்பான நிகழ்வுகளால் 197 போ் காயமடைந்தனா். பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதுகாப்புப் படை வீரா்கள் 3 பேரும், பொது மக்கள் 17 பேரும் உயிரிழந்தனா். 129 போ் காயமடைந்தனா்.

சிறப்பு அந்தஸ்து ரத்து, ஜம்மு-காஷ்மீரை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது ஆகிய நடவடிக்கைகளால் அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெரும்பாலான கட்டுப்பாடுகள் தற்போது தளா்த்தப்பட்டுள்ளன. சாலை, சுகாதாரம், சுற்றுலா, விவசாயம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளா்ச்சி திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பல திட்டங்கள் தற்போது ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com