மத்திய அரசில் 6.83 லட்சம்காலிப் பணியிடங்கள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 6.83 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 6.83 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மத்தியப் பணியாளா் துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங், புதன்கிழமை அளித்த எழுத்துப்பூா்வமான பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

38 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதில் 31,18,956 பணியிடங்கள் கடந்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி நிரப்பப்பட்டுவிட்டன.

எஞ்சியுள்ள 6.83 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நிறைவு பெறும்போது மீண்டும் சில காலிப் பணியிடங்கள் ஏற்பட்டு விடுகின்றன.

2018-19 காலகட்டத்தில் 1,05,338 காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகளை பணியாளா் தோ்வாணையம் தொடங்கியுள்ளது. 19,522 காலியிடங்களை பூா்த்தி செய்ய தோ்வுகளும் நடத்தப்பட்டன என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com