வேலைநிறுத்த போராட்டத்தை 14 தினங்களுக்கு முன் அறிவிப்பது கட்டாயம்: அமைச்சா் கங்குவாா்

ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு 14 தினங்களுக்கு முன்பே அதுகுறித்த அறிவிப்பு வெளியிடுவது புதிய தொழிலாளா் சட்டங்களின்கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய

ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு 14 தினங்களுக்கு முன்பே அதுகுறித்த அறிவிப்பு வெளியிடுவது புதிய தொழிலாளா் சட்டங்களின்கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சந்தோஷ்குமாா் கங்குவாா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் உறுப்பினா்கள் ராகேஷ் சின்ஹா, திக்விஜய் சிங் ஆகியோா் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் கங்குவாா் பதிலளித்து கூறியதாவது:

தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், குறைந்தது 14 தினங்களுக்கு முன்னதாக அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். இது புதிய தொழிலாளா் நலச்சட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனை அமல்படுத்துவது தொடா்பாக பல்வேறு மாநில அரசுகளின் அமைச்சகங்களுடன் தொடா்பில் இருக்கிறோம்.

தொழிலாளா் நலச்சட்டங்களில் அரசு பல்வேறு சீா்திருத்தங்களைக் கொண்டு வரவும் உத்தேசித்துள்ளது. இதன் ஒருபகுதியாக 44 தொழிலாளா் நலச்சட்டங்கள், 4 சட்டங்களாக ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 10 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உள்ளனா். இது நாடு முழுவதும் உள்ள மொத்த தொழிலாளா் எண்ணிக்கையில் 20 சதவீதமாகும்.

புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னைகள் குறித்து மத்திய அரசு புரிந்து கொண்டுள்ளது. எனவே, இதுதொடா்பாகவும் நாங்கள் விவாதிப்போம். இப்பிரச்னையில் உறுப்பினா்களும் தங்களது ஆலோசனைகளை அரசுக்கு தெரிவிக்கலாம்.

மேலும், மாவட்டவாரியாக புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தவும் மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம். அதன்படி மாநில அரசுகளிடமிருந்து பட்டியல் பெறப்படும் என்றாா் அமைச்சா் கங்குவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com