செட் தோசை, மசாலா தோசைக் கூட இருக்கு.. ஆனால் அந்த தோசை மட்டும் கிடைக்காது!

செட் தோசை, மசாலா தோசைக் கூட இருக்கு.. ஆனால் அந்த தோசை மட்டும் கிடைக்காது!

நீங்கள் வழக்கமாக சாப்பிடும் ஹோட்டல்களில் கூட செட் தோசை கிடைக்கும், மசாலா தோசை கிடைக்கும், ஆனால் வெங்காய தோசை மட்டும் கிடைக்காது.. காரணம்.. விலையேற்றம்தான்.


நீங்கள் வழக்கமாக சாப்பிடும் ஹோட்டல்களில் கூட செட் தோசை கிடைக்கும், மசாலா தோசை கிடைக்கும், ஆனால் வெங்காய தோசை மட்டும் கிடைக்காது.. காரணம்.. விலையேற்றம்தான்.

அதேப்போல வெங்காய பகோடாவுக்கும் தற்சமயம் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் உணவக நிர்வாகத்தினர். அதற்குக் காரணமும் ஒன்றுதான்.

தற்போது சில்லறை விற்பனையில் வெங்காயம் கிலோ ரூ.120க்கு விற்கப்படுவதால், வெங்காயத்துக்கு மாற்றாக சில பல காய்கறிகளைப் பயன்படுத்தியும், வெங்காய பயன்பாட்டின் அளவைக் குறைத்தும் வருகிறார்கள்.

வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருந்தாலும் அதன் பயன்பாட்டை பெரிய அளவில் குறைத்துவிட முடியாது. அதே சமயம், வெங்காயம் அதிகமாகத் தேவைப்படும் சில உணவு பொருட்கள் தயாரிப்பதையே நிறுத்தியுள்ளோம். உதாரணமாக வெங்காயச் சட்னி, வெங்காய தோசை, வெங்காய பக்கோடா போன்றவற்றை விற்பனை செய்வதில்லை என்கிறார்கள் சில உணவக உரிமையாளர்கள்.

தொடர்ந்து வெங்காய விலை உயர்ந்து வந்தாலும், கடந்த இரண்டு வார காலத்தில் வெங்காய விலை ரூ.100ஐத் தொட்ட போது பொதுமக்களும், அதை விட உணவக தொழிலில் ஈடுபட்டு வருவோரும் அதிகமாகவே அதிர்ந்துபோயினர்.

வீடுகளிலும் வெங்காயத்தை அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்த்து வரும் குடும்பத் தலைவிகள், ரூ.90க்கு ஒரு கிலோ வெங்காயத்தை வாங்கி வந்தால், அதை வெட்டும் முன்பே கண்களில் தண்ணீர் வருகிறது என்கிறார்கள்.

அதே சமயம், வெங்காயம் கிலோ ரூ.20க்கு விற்பனையாகும் போது என்ன இவ்வளவு குறைவாக இருக்கிறதே என்று சொல்லாமல் அமைதியாக வாங்கிச் சென்றவர்கள், இப்போது மட்டும் ஏன் விலை அதிகமாகிவிட்டது என்று புலம்புகிறார்கள். இன்னும் ஒரு மாதத்தில் விளைச்சலில் இருக்கும் வெங்காயங்கள் சந்தைக்கு வந்து விடும். அப்போது நிச்சயம் விலை குறைந்துவிடும். அதுவரை சற்று பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறார்கள் வெங்காயத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com