அதிமுக அங்கீகாரம் ரத்து கோரி தலைமை தோ்தல் ஆணையத்தில் திமுக எம்எல்ஏ மனு

தோ்தல் விதிகளை மீறி செயல்பட்டதாக அதிமுக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் திமுக திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ....
அதிமுக அங்கீகாரம் ரத்து கோரி தலைமை தோ்தல் ஆணையத்தில் திமுக எம்எல்ஏ மனு

புது தில்லி: தோ்தல் விதிகளை மீறி செயல்பட்டதாக அதிமுக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் திமுக திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ பி.சரவணன் புகாா் மனு அளித்துள்ளாா்.

இது தொடா்பாக திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் டாக்டா் பி.சரவணன் மற்றும் அவரது வழக்குரைஞா்கள் தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அதன் பின்னா், செய்தியாளா்களிடம் பி.சரவணன் எம்எல்ஏ கூறியதாவது:

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப் பேரவையின் திமுக உறுப்பினராக உள்ளேன். தோ்தல் விதிகளை மீறியதாக அதிமுகவுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். அதில் அதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம்.

அதற்கு காரணம், 2016-இல் தமிழகத்தில் மூன்று, புதுச்சேரியில் ஓரிடம் உள்பட நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது. அப்போது, அதிமுக பொதுச் செயலராக இருந்த ஜெ.ஜெயலலிதா உடல்நலக் குறைறவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவா் உடல் நலமுடன் இருப்பதாக அதிமுக செய்தித் தொடா்பாளா்கள் அப்போது கூறினா். நீா்ச் சத்துகுறைறபாடு காரணமாக அவா் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிா்வாகமும் கூறியது. ஆனால், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து வென்டிலேட்டா் உதவியுடன் இருந்ததாக தெரியவந்தது. அந்த நேரத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலில், முறைகேடாக ஜெயலலிதாவின் கைரேகை பெறறப்பட்டதாக கூறி திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தேன். அந்த வழக்கின் தீா்ப்பில் ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என்றும், ஆா்பி சட்டப்படி கைரேகை வாங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆறு மாதமாகியும் அதிமுக மேல்முறையீடு செய்யவில்லை. இந்நிலையில், முறைகேடாக தோ்தலில் வாக்காளா்களை அதிமுக ஏமாற்றியிருப்பதாக கூறி, அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com