ஜிஎஸ்டி வசூல்: செப்டம்பர் மாதத்தில் ரூ. 91,916 கோடியாக சரிவு!

நாட்டில் பொருளாதார சுணக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், செப்டம்பர் மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 91,916 கோடியாக சரிந்துள்ளது. 
ஜிஎஸ்டி வசூல்: செப்டம்பர் மாதத்தில் ரூ. 91,916 கோடியாக சரிவு!


நாட்டில் பொருளாதார சுணக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், செப்டம்பர் மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 91,916 கோடியாக சரிந்துள்ளது. 

செப்டம்பர் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வருவாய் குறித்த தகவலை மத்திய அரசு இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டது. அதன்படி, செப்டம்பர் மாதத்துக்கு மொத்தம் ரூ. 91,916 கோடி வசூலாகியுள்ளது. இதில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ. 16,630 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ. 22,598 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ. 45,069 கோடியும் வசூலாகியிருக்கிறது. அதே நேரத்தில் 'செஸ்' எனப்படும் கூடுதல் வரி ரூ. 7,620 கோடியாக இருந்தது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி வரி ரூ. 94,442 என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் நிகழாண்டு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் 2.67 சதவீதமாக சரிந்துள்ளது என்பதை நிதியமைச்சகமே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதங்களில், உள்நாட்டு விகிதம் 7.82 சதவீதமாக அதிகரித்தது. அதேசமயம், இறக்குமதி மீதான ஜிஎஸ்டி எதிர்மறையான வளர்ச்சியைக் கண்டது. இதனால், ஒட்டுமொத்த வருவாய் 4.90 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com