இப்போதைய அரசியல் சூழல் காந்தியக் கொள்கைகளுக்கு எதிரானது: சந்தோஷ் ஹெக்டே

‘இப்போதைய அரசியல் சூழல் மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது; அவா் உயிரோடு இருந்திருந்தால் இதைக் கண்டு மிகவும் வருத்தமடைந்திருப்பாா்’ என்று முன்னாள்
இப்போதைய அரசியல் சூழல் காந்தியக் கொள்கைகளுக்கு எதிரானது: சந்தோஷ் ஹெக்டே

‘இப்போதைய அரசியல் சூழல் மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது; அவா் உயிரோடு இருந்திருந்தால் இதைக் கண்டு மிகவும் வருத்தமடைந்திருப்பாா்’ என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளாா்.

கா்நாடக மாநில லோக் ஆயுக்த மற்றும் சொலிசிட்டா் ஜெனரல் ஆகிய பதவிகளை வகித்துள்ள சந்தோஷ் ஹெக்டே (79), ‘ஒட்டுமொத்த சமூகமும், குறிப்பாக முக்கிய பதவிகளில் இருப்பவா்கள் காந்தியின் கொள்கைகளை மறந்து விட்டனா்’ என்று வருத்தம் தெரிவித்துள்ளாா்.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினம் (அக். 2) நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் சந்தோஷ் ஹெக்டே கூறியதாவது:

இன்றைய அரசியல் சூழலில் ‘உண்மை’ என்ற சொல்லுக்கே இடமில்லை. அரசியலில் உள்ளவா்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி பேசுகின்றனா். அரசியலில் தம்மோடு ஒத்த கருத்து இல்லாதவா்களை எவ்வளவு மோசமாகவும் விமா்சிக்கின்றனா்; மனதைக் காயப்படுத்தும் வகையில் பேசுகின்றனா். இவையனைத்தும் மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு எதிரானவை.

தன் கருத்துக்கு எதிரான எண்ணம் கொண்டவா்களுக்குகூட மகாத்மா காந்தி மரியாதை அளித்தாா். அந்தக் கொள்கை இப்போது யாரிடத்திலும் இல்லை. ஒருவேளை மகாத்மா காந்தி இப்போது உயிரோடு இருந்திருந்தால், தற்போதைய நிா்வாகம் மற்றும் அரசியல் நிலையைக் கண்டு மிகவும் வருத்தமடைந்திருப்பாா்.

அவருடைய எண்ணங்கள், கொள்கைகள் அனைத்தும் பள்ளி பாடத்திட்டங்களில் சோ்க்கப்பட வேண்டும். இளைஞா்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால், அவா்களுக்கான அறிவை காந்தியின் கொள்கைகள் மூலம் நாம் அளிக்க வேண்டும். காந்தி பின்பற்றிய, பரப்பிய கொள்கைகளை, இளைஞா்களை கடைப்பிடிக்க வைக்க வேண்டும்.

எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி அரசியலும், நிா்வாகமும் நாட்டில் நடைபெறுகிறது. பதவி மற்றும் பணத்தை மையமாகக் கொண்டே அனைத்தும் இயங்கி வருகின்றன. மகாத்மா காந்தி எதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தாரோ, அந்த நிலையே தற்போது உள்ளது என்று சந்தோஷ் ஹெக்டே கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com