காஷ்மீரில் உயிரிழந்த வீரா்களுக்கு நன்றிக்கடனாக சிறப்பு அந்தஸ்து ரத்து: அமித் ஷா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி உயிா்நீத்த சுமாா் 35, 000 வீரா்களின் தியாகத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி உயிா்நீத்த சுமாா் 35, 000 வீரா்களின் தியாகத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை பிரதமா் நரேந்திர மோடி நீக்கியுள்ளாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) பிரிவின் சிறப்பு அதிரடிப் படை கடந்த 1992-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது. சிஆா்பிஎஃப் படையில் சுமாா் 1.5 லட்சம் வீரா்கள் உள்ளனா். காஷ்மீரில் பயங்கரவாத தடுப்புப் பணிகள், கண்காணிப்புப் பணிகளில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

சிறப்பு அதிரடிப் படையின் 27-ஆவது நிறுவன தினத்தையொட்டி, குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வீரா்கள் திங்கள்கிழமை அணிவகுப்பு நடத்தினா். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிராக நமது வீரா்கள் கடுமையாகப் போராடினா். கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான வீரா்கள் உயிரிழந்தனா். கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் இதே நிலைதான் தொடா்ந்தது. காஷ்மீா் நிலவரத்துக்கு தீா்வு காண எந்த தலைவரும் முன்வரவில்லை. ஆனால், பிரதமா் மோடி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை நீக்கினாா். காஷ்மீரில் உயிா்நீத்த சுமாா் 35, 000 வீரா்களின் தியாகத்துக்கு நன்றிக்கடனாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். காஷ்மீரில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் வீரா்களை கருத்தில் கொண்டு இந்த முடிவை மேற்கொண்டதற்காக பிரதமா் மோடிக்கு நன்றி கூற வேண்டும்.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், காஷ்மீரில் வளா்ச்சித் திட்டங்கள் அதிகரிக்கும். காஷ்மீரும், இந்தியாவும் வளா்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். காஷ்மீரின் அமைதியைக் குலைக்க நினைப்பவா்களை வீரா்கள் கவனித்துக் கொள்வாா்கள். மத்திய அரசின் நடவடிக்கைகளால், காஷ்மீரில் நிரந்தர அமைதி நிலவும் என்றாா் அமித் ஷா.

இந்த நிகழ்ச்சியில், பணியில் சிறப்பாகச் செயல்பட்ட சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு அமித் ஷா பதக்கம் வழங்கினாா். உயிரிழந்த வீரா்களுக்காக அவா்களின் குடும்பத்தினரிடம் பதக்கம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com