வெகு விரைவில் ஆசிரியர்களின் இடங்களை நிரப்பப் போகிறதா ரோபோக்கள்? 

செய்தி வாசிப்பாளர், ஹோட்டல் சர்வர்கள் என பல பணியிடங்களை ரோபோக்கள் நிரப்பிக் கொண்டிருக்கும் நிலையில், ஆசிரியர்களின் இடங்களையும் நிரப்ப ரோபோக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ரோபோக்கள்
ரோபோக்கள்


செய்தி வாசிப்பாளர், ஹோட்டல் சர்வர்கள் என பல பணியிடங்களை ரோபோக்கள் நிரப்பிக் கொண்டிருக்கும் நிலையில், ஆசிரியர்களின் இடங்களையும் நிரப்ப ரோபோக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கலி யுகம் என்பதை மாற்றி கணினி யுகமாக்கினான் மனிதன். இன்று அந்த மனிதன் இருந்த இடம் தெரியாமல் செய்யும் அளவுக்கு ஓட விட்டுக் கொண்டிருக்கிறது அந்த கணினி.

ஒரு காலத்தில் அலுவலக டேபிளில் இருந்த காலண்டர், கடிகாரம், டைரி, கால்குலேட்டர், பேப்பர்கள், ஃபைல்கள் என எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்ட கணினி, இன்று மனிதர்களின் பணியிடங்களையும் பிடிக்கப் பார்க்கிறது.

அந்த வகையில் புதிதாக தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பது ஆசிரியர் பணியிடங்களை. ஆசிரியர்களுக்கு பதிலாக ரோபோக்களைக் கொண்டு பாடம் நடத்த சில பள்ளிகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

பெங்களூருவில் உள்ள இந்துஸ் சர்வதேச பள்ளியில் ஈகிள் 2.0 என்ற மனித ரோபோ மூலம் வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மிகவும் முன்னணி தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்பதால், இதனுடன் மாணவர்கள் பேசவும், சந்தேகங்களை கேள்வியாக எழுப்பி பதில்களைப் பெறவும் முடியும்.

ஒரு அழகியப் பெண்ணைப் போல நவீன நாகரிக உடையுடன் வகுப்பில் தோன்றி பாடம் எடுக்கும் இந்த ஆசிரியரிடம், மாணவ, மாணவிகள் கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெறுகிறார்கள்.

கூகுள் போன்றவற்றில் தேடி பல விஷயங்களை சேகரித்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்கள். தகவல்களை திரட்டவே ஆசிரியர்களுக்கு அதிகக் காலம் தேவைப்படுகிறது. ஆனால், ரோபோக்களே கூகுள் போல செயல்படுவதால், பாடம் எடுக்கும் பணி எளிதாகிறது என்கிறது பள்ளி நிர்வாகம்.

ஆனால், இந்த முயற்சி எப்போதுமே ஒரு முயற்சியாகவே இருக்கும் என்றும், ஆசிரியர்கள் மணாவர்களுக்கு வெறும் பாடங்களை மட்டும் போதிப்பதில்லை, அவர்களுக்கு பெற்றோராக, வழிகாட்டியாக, பல்வேறு மனநிலைகளில் தோழனாக இருக்கிறார்கள்.

எனவே, அதையெல்லாம் ரோபோக்கள் செய்ய முடியாது, மாணவர்களுக்கு ரோபோக்கள் மூலம் பாடம் நடத்தினால், மாணவர்களும் மனிதத்தை இழந்து ரோபோக்களாகத்தான் செயல்பட முடியும். உலகின் நடப்பு சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்து செயல்படும் ஆசிரியர்களின் பணியிடங்களை எந்த காலத்திலும் யாராலும் நிரப்ப முடியாது என்பதே உண்மை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com