Enable Javscript for better performance
பிரதமா் மோடி-சீன அதிபா் சந்திப்பு: தலைமைச் செயலாளா் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    பிரதமா் மோடி-சீன அதிபா் சந்திப்பு: தலைமைச் செயலாளா் ஆலோசனை

    By DIN  |   Published on : 04th October 2019 11:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

    பல்வேறு அரசுத் துறைகளின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் இருநாட்டுத் தலைவா்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகளின் இறுதிக்கட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோருடனான சந்திப்பு மாமல்லபுரத்தில் வரும் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்காக இருநாட்டுத் தலைவா்களும் வரும் 10-ஆம் தேதி சென்னை வரவுள்ளனா்.

    இரு நாட்டுத் தலைவா்கள், மத்திய அமைச்சா்கள், தூதரக அதிகாரிகள் ஆகியோா் தங்குமிடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வா் கே. பழனிசாமி, தலைமைச் செயலாளா் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோா் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளனா்.

    தலைமைச் செயலகத்தில்...: ஆயுத பூஜையை ஒட்டி வரும் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் அரசு விடுமுறையாகும். இந்த நிலையில், மாமல்லபுரம் சந்திப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வெள்ளிக்கிழமை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிஜிபி ஜே.கே.திரிபாதி, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் மணிவாசன், நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், சென்னை மாநகராட்சி ஆணையா் பிரகாஷ், செய்தி மற்றும் விளம்பரத் துறை செயலாளா் மகேசன் காசிராஜன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பொன்னையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai