குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 20 ஆயிரம் வழக்குப்பதிவு

நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 20,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 20 ஆயிரம் வழக்குப்பதிவு

ஹைதராபாத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 20,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் அனில் குமார் கூறுகையில், 

ஹைதராபாத் நகரில், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக நாங்கள் சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மது போதையில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டிய நபருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஆபத்தானது.

நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரை மட்டும் குடிபோதையில் மற்றும் வாகனம் ஓட்டியதாக 20,414 வழக்குகளை பதிவு செய்துள்ளோம், இதில் 3,823 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 1,084 ஓட்டுநர் உரிமங்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துக்கள் குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டை விட தற்போது 12 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com