ஓரினச் சேர்க்கையில் ஏற்பட்ட  பணத்தகராறு: குத்திக் கொல்லப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி 

ஓரினச் சேர்க்கையில் ஏற்பட்ட  பணத்தகராறின் காரணமாக இஸ்ரோவின் துணை அமைப்பில் பணியாற்றும் விஞ்ஞானி ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஓரினச்  சேர்க்கையால் கொலை
ஓரினச் சேர்க்கையால் கொலை

ஹைதராபாத்: ஓரினச் சேர்க்கையில் ஏற்பட்ட  பணத்தகராறின் காரணமாக இஸ்ரோவின் துணை அமைப்பில் பணியாற்றும் விஞ்ஞானி ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹைதாராபாத்தில் செயல்படும் இஸ்ரோவின் துணை அமைப்பான 'நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜென்சியில்' கடந்த 20 வருடங்களாகப் பணியாற்றி வருபவர் சுரேஷ் குமார் (56). கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட இவரின் குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது. இவரது மனைவி இந்திராணி வங்கி ஊழியர். சுரேஷ்குமார் மட்டும் ஹைதாராபாத்தில் தனியாக அமீர்பேட் என்னும் பகுதியில் வசதியான பிளாட் ஒன்றில் வசித்து வருகிறார். 

கடந்த செவ்வாயன்று இந்திராணி கணவர் சுரேஷை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்பதால் அங்குள்ள தனது உற்வினர்களை வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அங்கே அவர்கள் சென்று  பார்த்த போது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்துள்ளது.

இதன் காரணமாக அவர் உடனடியாக ஹைதராபாத் விரைந்து வந்து போலீசாரிடம் புகார் செய்துள்ளார். பின்னர் போலீசார் முன்னிலையில் கதவு உடைக்கப்பட்டபோது அங்கே சுரேஷ்குமார் ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார் 

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அருகில் உள்ள விஜயா பரிசோதனை நிலையத்தில் வேலை செய்துவரும் ஸ்ரீநிவாஸ் என்பவர் சுரேஷின் இல்லத்திற்கு ரத்த மாதிரிகளை பெறுவதற்காக அடிக்கடி வந்து போவது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் போலீசாரின் சந்தேகப் பார்வை அவர் பக்கம் திரும்பியது

அவரிடம் விசாரித்ததில் சுரேஷ் குமாருக்கும் அவருக்கும் ஓரினச் சேர்க்கை தொடர்பு இருந்ததையும், சுரேஷ் தனியாக இருப்பதால் தனக்கு அதிக பணம் தருவார் என்று எண்ணி தானும் சம்மதித்ததையும் ஒப்புக் கொண்டார்.

ஆனால் சுரேஷ் அவ்வாறு பணம் தருவதில்லை என்பதால் இருவரிடையே தகராறு மூண்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகாரறின் நீட்சியாக சுரேஷை தான் கத்தியால் குதிக்க கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஸ்ரீநிவாஸிடம் இருந்து சுரேஷ் குமாரின் தங்க மோதிரம், ரூ. 10000 ரொக்கம் மற்றும் செல்போன் கைப்பற்றப்பட்டதும், வீடு வெளிப்புறமாகத் தாழிடப்பட்டிருந்ததும் அவருக்கு எதிரான முக்கிய ஆதாரங்கள் என்று, ஹைதாராபாத் காவல்துறை ஆணையர் அஞ்சனி குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   

அத்துடன் கொலை நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ரத்த மாதிரிகள், தலை முடி மற்றும் ஸ்ரீனிவாசன் செல்போன் அழைப்புகள் ஆகியவையும் சேகரிக்கப்பட்டு குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com